தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

webteam

மதுராந்தகம் ஏரி நிரம்பியதால் 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏரிகள் நிரம்பி வருகின்றன. 
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி தனது முழுக்கொள்ளவை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. மதுராந்தகம் ஏரியின் முழுக் கொள்ளளவான 23.5 அடியில் தற்போது நீர்மட்டம் 20.5 அடியை எட்டியுள்ளது. 
இந்த நிலையில் மதுராந்தகம் ஏரியில் உள்ள தண்ணீர் அவசர மதகுகள் மூலம் கிளியாற்றில் திறந்து விடப்பட உள்ளது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள விருகமங்கலம், குன்னத்தூர், மலைப்பாளையம், கருங்குழி, கத்திரிச்சேரி, விமுதமங்கலம் இருசாமநல்லூர், முன்னூத்திகுப்பம், தச்சூர், தோட்டநாவல் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்கவோ வேடிக்கை பார்க்கவோ ஆற்றின் அருகே யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன.