வந்தே பாரத்
வந்தே பாரத் pt desk
தமிழ்நாடு

மதுரை: வந்தே பாரத் ரயிலுக்காக 46 வருட வைகை எக்ஸ்பிரஸின் நேரத்தை மாற்றுவதா – பயணிகள் கடும் எதிர்ப்பு!

webteam

தற்போது வைகை எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு, அதாவது 7 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்னை எழும்பூர் வந்தடையும். அதேபோல் சென்னையில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு, அதாவது, 7 மணி நேரம் 25 நிமிடங்களில் மதுரை வந்தடையும்.

train

இந்நிலையில், புதிய மாற்றத்தின்படி தற்போதைய பயண நேரத்தை மேலும் 15 நிமிடங்கள் அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து காலை 6.40-க்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், பிற்பகல் 2.10 மணிக்கு அதாவது 7 மணி 30 நிமிடங்களில் சென்னை வந்தடையும். அதேபோல் சென்னையில் இருந்து வழக்கம்போல பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.30 மணிக்குதான் அதாவது 7 மணி நேரம் 40 நிமிடங்களில் மதுரையைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வைகை எக்ஸ்பிரஸ் இரவு 9.15 மணிக்கு மதுரை வந்து சேரும் நிலையில், மதுரையின் புறநகர் பகுதிகளுக்கோ அருகிலுள்ள மாவட்டங்களுக்கோ செல்லக் கூடியவர்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சற்று முன்னதாக மதுரை வந்து சேர்ந்தால் நல்லதென எதிர்பார்க்கின்றனர். புதிய திட்டத்தின்படி வைகை வந்து சேருவது மேலும் தாமதமாவதால் பயணிகள் கூடுதல் இன்னலுக்குதான் ஆளாவார்கள்.

madurai railway junction

எனவே, இந்த நேர அட்டவணையை மீண்டும் பழைய முறையில் மாற்றியமைத்து, வைகை எக்ஸ்பிரஸின் பயண நேரத்தை முன்னர் இருந்தவாறே திட்டமிட வேண்டும். வைகை, பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட உள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைப்பால் பயண நேரம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.