தமிழ்நாடு

நித்யானந்தா சீடர் கொலை வழக்கு : தேடப்பட்டு வந்த 7 பேர் நீதிமன்றத்தில் சரண்

webteam

நித்யானந்தா சீடர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 7 பேர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதியை சேர்ந்த வஜ்ரவேல் என்பவர் நித்தியானந்தாவின் சீடராக இருந்து வந்தார். இவர் அதே பகுதியில் கடை வைத்து நடத்தி வந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு காணாமல் போனதாக வஜ்ரவேலின் மனைவி பாகூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து புதுச்சேரி குருவிநத்தம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காருக்குள் வஜ்ரவேல் ப்ளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 7 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த சரத்குமார், விஜய், அசோக், ராஜதுரை, சர்பாலன், அய்யனார் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த மதன் ஆகியோர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து சரணடைந்த 7 பேரையும் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலி்ல் அடைக்க நீதிபதி உத்தவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.