தமிழ்நாடு

மதுரையில் குற்றங்களை குறைக்க களமிறக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள்

மதுரையில் குற்றங்களை குறைக்க களமிறக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள்

webteam

மதுரை மாவட்டம் மேலூரில் குற்றங்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

மதுரையில் பேருந்து நிலையம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அழகர்கோவில் சாலை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தியுள்ளனர். மேலூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

ஆனால் நாளடைவில் அவை பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டன. இதனால் குற்றங்கள் அதிகரித்தன. இந்த நிலையில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு டி.எஸ்.பி. சக்கரவர்த்தி நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.