தமிழ்நாடு

இரவில் செயின் பறிக்கும் கும்பல் : ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்

இரவில் செயின் பறிக்கும் கும்பல் : ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்

webteam

மதுரையில் இரவு நேரங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

மதுரையில் எஸ்.எஸ் காலணி, கரிமேடு, சுப்பிரமணியபுரம், தல்லாகுளம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் நகைகளை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இதனால் காவல்துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்குமார் அகர்வால், செயின் பறிப்பு கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதன்படி இரவு நேரத்தில் செயின் பறிப்பு நடைபெறும் சாலைப்பகுதிகளில், காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். செயின் பறிப்புகளில் ஈடுபடும் திருடர்களை பிடிக்கும் போது, அவர்கள் தப்பிச்செல்லாமல் இருக்க குறிப்பிட்ட சாலைகளில் பதுங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று பெண் ஒருவரிடம் செயின் பறித்துக்கொண்டு சென்ற திருடர்களை திட்டமிட்டபடி மடக்கிப்பிடித்தனர். இதில் புவனேஸ்வரன், ராஜ்குமார், சிலம்பரசன், மனோஜ்குமார், சதீஸ்குமார், செல்வகணேஷ், கோபிநாத் ஆகிய 7 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 52 அரை சவரன் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.