jewelery shop
jewelery shop pt desk
தமிழ்நாடு

அட்சய திரிதியை: இரண்டாவது நாளாக நகைக்கடைகளில் குவியும் மதுரை மக்கள் - தங்கம் விற்பனை அமோகம்

Kaleel Rahman

அட்சய திருதியை தினத்தன்று எந்த பொருள் வாங்கினாலும் அது மென்மேலும் பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் இந்நாளில் மக்கள் தங்கம், வைரம், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது வழக்கம். இந்நிலையில் மதுரை நகைக்கடை பஜார் பகுதியான நேதாஜி ரோடு உட்பட பல இடங்களில் உள்ள ஏராளமான நகைக் கடைகளில் திரளான மக்கள் கூட்டம் காணப்படுகின்றது.

jewelery

இந்த நாளில் ஒரு குண்டுமணி தங்கத்தையாவது வாங்கி விட வேண்டும் என்பது தான் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், மதுரையில் தங்கத்தின் விலை ஒரு பவுன் 44,600 ரூபாயாகவும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5575 ரூபாயாகவும் உள்ளது. இதில், தாலிச் செயின், திருமாங்கல்ய குண்டுகள், மணிகள், மாங்காய் காசு, லட்சுமி மற்றும் அன்னக்காசு, தாலிக் கொடியில் கோர்க்கப்படும் பவளங்கள் ஆகியவற்றை பெண்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

Gold jewelery

மேலும் திருமணத்திற்கான நகைகளை இன்றைய தினம் வாங்குவதற்கு மக்கள் அதிகம் விரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர். நாள்தோறும் 10 மணிக்கு நகைக் கடைகளை திறக்கும் நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கே வியாபாரிகள் நகைக் கடைகளை திறந்துள்ளனர். வழக்கமான நாட்களை விட இன்றைய தினம் நகைக் கடைகளில் அதிக விற்பனை தங்கம் செய்யும் நாள் என்பதால் அட்சய திருதியை நகைக் கடையின் தீபாவளி பண்டிகை என நகைக்கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.