மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறமுள்ள கட்டடத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுயநினைவின்றி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில், பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பட்டூர் பகுதியில் குவாரியில் வேலை செய்யும் விருமாண்டி என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.