தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை

kaleelrahman

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும், ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக ;கிழமையான இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் கோயிலுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மிகவும் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து 18 படி பச்சரிசியில், வெல்லம், தேங்காய், கடலை, எள்ளு, ஏலக்காய், நெய் கலந்து கொழுக்கட்டை தயார் செய்து விநாயகருக்கு படைக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் இன்றி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கோவில் நிர்வாகத்தின் சார்பில் இணையவழியில் நேரலை வாயிலாக பக்கதர்கள் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.