தமிழ்நாடு

165 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் - நீண்ட வரிசையில் மக்கள் தரிசனம்

webteam

மதுரையில் 165 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளின் படி அனுமதிக்கப்பட்டனர். 

தமிழக அரசு நேற்று முன் தினம் ஊரடங்கை நீட்டித்து, மேலும் தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பொது போக்குவரத்து, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றிற்கு கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில், 165 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது. கோயில் திறக்கப்பட்டதையொட்டி தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிய வண்ணம் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் எட்டு மணி வரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது.