பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக மதுரையைச் சேர்ந்த ஒருவர் வடிவமைத்து தந்துள்ள ஒலி எழுப்பக்கூடிய கருவி, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பார்வை மாற்றுத்திறனாளிகள் யாருடைய உதவிகளும் இன்றி வெளியில் சென்று வருவதற்கு கைகளில் குச்சியை எடுத்துச்செல்வது வழக்கம். அப்படி செல்லும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக மதுரை பி.பி. குளத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் ஒளிரக்கூடிய மற்றும் ஒலி எழுப்பக்கூடிய கருவியுடன் கூடிய குச்சியை வடிவமைத்துள்ளார். சாலையில் ஒரு மாற்றுத்திறனாளி எதிரில் வந்தவர் மீது மோதி கீழே விழுந்ததை பார்த்த பின்பும் இந்தக் கருவியை அப்துல் ரசாக் உருவாக்கி அவருக்கே பரிசாக அளித்துள்ளார்.
இந்த ஸ்டிக்கில் ஒளி மற்றும் ஒலி வருவதால் சாலையில் நடந்து செல்லும் போது எதிரில் வருபவர்கள் உதவி செய்ய வாய்ப்புகள் உள்ளதாக பார்வை மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கிறார்கள். இந்த எளிய கண்டுபிடிப்பைப்போல, 52 விதமான எளிய கருவிகளை அப்துல் ரசாக் உருவாக்கியுள்ளார். எனினும் இந்தக் கண்டுபிடிப்பு மிகவுகம் உதவிகரமாக இருப்பதால், தமிழக அரசே இதனை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று பார்வை மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.