உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று (மே 12) அதிகாலை நடைபெற்றது.
தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நடைபெறும் திருமஞ்சன நிகழ்ச்சிக்குப் பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்று அணிந்துகொள்ளும் கள்ளழகர், இன்று காலை பச்சை நிறப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.