மதுரை உயர் நீதிமன்றம் pt web
தமிழ்நாடு

லிவ்-இன் உறவில் பெண்களுக்கு மனைவி அந்தஸ்து.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!

திருமண வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

PT WEB

நவீன வாழ்க்கை முறையில் லிவ்-இன் உறவுகள் அதிகரித்துள்ள சூழலில், அத்தகைய உறவில் இருக்கும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க அவர்களுக்கு 'மனைவி' அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். ஸ்ரீமதி தெரிவித்துள்ளார்.

model image

இதுகுறித்தான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் தீர்பளித்த நீதிபதி, காதலித்த பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு, பின்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு மற்றும் வேலையின்மை போன்ற காரணங்களைக் கூறித் திருமணத்தை மறுத்த நபரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், அவரைப் புதிய BNS சட்டப்பிரிவு 69-இன் கீழ் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், திருமண வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து பாலியில் ரீதியிலான தொடர்பில் இருந்தால், தன்னை மனைவியாக அங்கீகரிக்கக் கோரும் உரிமை அந்தப் பெண்ணுக்கு உள்ளதாகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.