தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் 3ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் கடையடைப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதால், உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் முறையிட்டார்.
இதுதொடர்பாக விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு போராட்டங்களுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமின்றி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.