தஞ்சையில் புதிதாக கட்டுப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ரூ.52 கோடி செலவில் புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை திறக்க இடைக்கால தடை கோரி நீலகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
மனுவில், பாலம் திட்டமிட்டப்டி கட்டப்படவில்லை. பாலத்தின் மேற்குப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் விரிசல் ஏற்பட்ட நிலையில் அதனை ஜல்லி துகள்கள் கொண்டு நிரப்பி அவசர அவசரமாக பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படலாம். எனவே பாலத்தை வலுவான முறையில் கட்டமைக்கும் வரை திறக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பாலத்தை திறக்க இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் முறையான அனுமதியை பெறுவதற்கு முன் பாலத்தை திறக்கக்கூடாது என குறிப்பிட்ட நீதிபதிகள், இதுகுறித்து தேசியநெடுஞ்சாலைதுறையின் தலைமைப் பொறியாளர் பதிலளிக்கவும் உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.