தமிழ்நாடு

சாதனை தம்பதியின் 5 வயது மகள் படைத்த கின்னஸ் சாதனை: என்னவென்று தெரியுமா?

சாதனை தம்பதியின் 5 வயது மகள் படைத்த கின்னஸ் சாதனை: என்னவென்று தெரியுமா?

kaleelrahman

மதுரையில் ஜம்பிங் ஜாக்ஸ் போட்டியில் கின்னஸ் சாதனை படைத்த 5 வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் நாராயணன். மென்பொறியாளரான இவர், டேக்வோண்டோ மீதுள்ள ஈடுபாட்டால் தனது 23வது வயதிலிருந்து டேக்வாண்டோ கற்கத் தொடங்கினார். இதுவரை டேக்வாண்டாவில் 25 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ள இவரது, மனைவி ஸ்ருதியும் டேக்வாண்டோவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது 5 வயது மகள் சம்யுக்தா ஜம்பிங் ஜாக்ஸ் போட்டியில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஜாம்பிங் ஜாக்ஸ் கின்னஸ் சாதனை போட்டியில் மொத்தம் 400 பேர் பங்கேற்றனர். இதில், 170 பேர் கின்னஸ் சாதனைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மிகக்குறைந்த வயதில் ஜம்பிங் ஜாக்ஸ் போட்டியில் கலந்து கொண்ட சிறுமி சம்யுக்தா இரண்டரை நிமிடத்தில் 200 ஜம்பிங் ஜாக்ஸ் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து டேவாண்டோ போட்டியில் மாவட்ட அளவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ள இவர், மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.