தமிழ்நாடு

மதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார்

மதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார்

webteam

மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ஆர்.சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.

இவர் தேமுதிக சார்பில் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 ம் ஆண்டு தேமுதிக, அதிமுக உடன் கூட்டணி அமைந்து 30 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றது.

பின்னாளில் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிர்க் கட்சித்தலைவர் விஜயகாந்த்க்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களில் ஆர் சுந்தர்ராஜனும் ஒருவராவார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் தன்னை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளரை விட 19560 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.சுந்தர்ராஜன் வெற்றி பெற்றார்.

தேமுதிக பொருளாளராக இருந்தவர். தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சிறு வயது முதலே நண்பராக இருந்தவர். மதுரையில் விஜயகாந்த் நற்பணி மன்றம் முதன்முதலில் அமைத்தவர். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.