தமிழ்நாடு

மதுரை: கால்ல கூட விழுறேன் என் காளைய அவுக்க விடுங்க! கெஞ்சிய இளைஞர் - காரணம் என்ன?

webteam

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தகுதியற்ற ஜல்லிக்கட்டு காளைக்கு அனுமதி அளிக்கக் கோரி அடம் பிடித்த இளைஞருக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1004 காளைகள் பங்கேற்று வருகின்றன. ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு காளைகளுக்கு உடல் தகுதி செய்யப்பட்ட பின்பே வாடி வாசலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் தனது காளையை உடல் பரிசோதனை மையத்திற்கு அழைத்து வந்தபோது, அது தகுதியற்றது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தகுதியற்ற காளைமாட்டை வாடிவாசலில் களம் இறக்கியே தீருவேன் என அங்கிருந்து போக மறுத்து அடம் பிடித்து அழுகும் நிலைக்குச் சென்றார் அந்த இளைஞர். மேலும் காளையை அவிழ்த்து விட முற்பட்டதால் காவல் துறையினர் இளைஞருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியின் வாடி வாசலுக்கு தகுதியுடன் வரும் காளைகளை மட்டுமே களம் இருக்குமாறு விழா ஏற்பாட்டாளர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.