தமிழ்நாடு

மதுரையில் இனி 80% குப்பை லாரிகள் இரவில் மட்டுமே இயக்கம்- மாநகராட்சி ஆணையாளர்

JustinDurai
மதுரை மாநகராட்சி குப்பை லாரிகள் இனிமேல் 80 சதவீதம் இரவில் மட்டுமே இயக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கார்த்திக்கேயன் அறிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளிலும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகள் 100 லாரிகள் மூலமாக சேகரிக்கப்பட்டு அவனியாபுரம், வெள்ளக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று பிரிக்கப்படுகிறது. குப்பை லாரிகள் பகலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும்போது எரிபொருள் பயன்பாடு அதிகரிப்பதாலும், விபத்துகள் ஏற்படுவதாலும் அதனை குறைக்கும் வகையில் இனி 80 சதவீதம் குப்பை லாரிகள் இரவில் மட்டுமே இயக்கப்படும் என்றும் மற்றவை பகலில் இயக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.