கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி pt desk
தமிழ்நாடு

மதுரை | அங்கன்வாடி மையத்தில் வழங்கிய சத்துணவு மாவு கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி!

மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததால் பரபரப்பு. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அங்கு பயிலும் சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக தயாரிக்கப்பட்ட கொலுக்கட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று சிறுமி ஒருவர், அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கொலுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனை பார்த்த சிறுமி அவரது தாயாரிடம் கொலுக்கட்டையில் பூச்சி இருப்பதாக கூறியுள்ளார். அதனை பிரித்துப் பார்த்த தாயார், கொலுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தள்ளார். இதனால் பதட்டமடைந்த அவர், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறமியை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு மருத்துவர்கள் இல்லை என கூறியதால் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்

நல்வாய்ப்பாக சிறுமி கொலுக்கட்டையை சாப்பிடுவதற்கு முன்பாக கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டுபிடித்தால் குழந்தைக்கு உடல் உபாதை ஏதும் ஏற்படவில்லை, இந்நிலையில் அங்கன்வாடி பணியாளர் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.