தமிழ்நாடு

தயாரிக்கும் போது வெடித்த நாட்டு வெடிகுண்டு : இருவர் படுகாயம்

தயாரிக்கும் போது வெடித்த நாட்டு வெடிகுண்டு : இருவர் படுகாயம்

webteam

மதுரையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் கீரைத்துறை அருகேயுள்ள வாழைத்தோப்பில் உள்ள வீட்டில், முனியசாமி, நரசிம்மன் என்ற இருவர் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டதில் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதமடைந்ததுள்ளது. அதில் முனியசாமி, நரசிம்மன் இருவருக்கும், கை, முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 50% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் மதுரை‌ அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து நேர்ந்த இடத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர், கியூ பிரிவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவரும், மதுரை மாநகர முன்னாள் மண்டலத் தலைவர் குருசாமியின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே நடந்த கொலை சம்பவங்களுக்கு பழிவாங்குவதற்காக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.