தமிழ்நாடு

மதுரை: அனுமதியின்றி பேனர்- பாஜகவினர் மீது வழக்கு

மதுரை: அனுமதியின்றி பேனர்- பாஜகவினர் மீது வழக்கு

kaleelrahman

மதுரையில் உரிய அனுமதியின்றி பேனர் வைத்ததாக பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதற்காக அழகர்கோவில் சாலையில் உரிய அனுமதி இல்லாமல் பாஜக கட்சியின் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது மாநகராட்சி நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினர், அப்போது பாஜகவினர் மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதோடு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உரிய அனுமதியின்றி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்கள் வைத்ததாக பாஜக மதுரை மாவட்டத் தலைவர் சரவணன் உள்ளிட்ட 25 பேர் மீது தல்லாகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.