செய்தியாளர்: மலைச்சாமி
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் பாண்டியன்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது காளை ராமு, வாடி வாசலுக்கு செல்வதற்கு முன்பே மருத்துவப் பரிசோதனை செய்யும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டது.
அப்போது அந்தக் காளை அதன் உரிமையாளருக்கு அடங்க மறுத்து அங்கிருந்த காவலர்களை முட்ட முயன்று துள்ளிக் குதித்து அனைவருக்கும் பயத்தை காட்டியது ஒரு கட்டத்தில் விசும்பி ஓட முயன்ற காளையை, அரை மணி நேரம் வரை போராடி காளையின் உரிமையாளரும் அவரின் உதவியாளர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து அந்தக் காளையை வாடி வாசலுக்கு அழைத்துச் சென்றனர். காளையின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.