தமிழ்நாடு

மரணத்திற்கு முன்பு ராணுவ வீரர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

மரணத்திற்கு முன்பு ராணுவ வீரர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

webteam

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் அசாம் மாநிலத்தில் உள்ள முகாமில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்.கல்லுப்பட்டியை அடுத்த சாணார்பட்டியைச் சேர்ந்த வெற்றிப்பாண்டி என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், அசாம் ‌மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் இருந்து தொடர்பு கொண்ட அதிகாரிகள், வெற்றிப்பாண்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். அதைக் கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெற்றிப்பாண்டி‌ வெளியிட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஒரு வார காலம் தண்ணீர் மற்றும் உணவு இன்றி துன்பப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.