தமிழ்நாடு

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சிறப்பு பூஜைகளுடன் நடப்பட்ட முகூர்த்தக்கால்

kaleelrahman

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

மதுரை அலங்காநல்லூரில் வருகிற 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இதையடுத்து வாடிவாசலுக்கு வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் தொடங்க உள்ளது. மதுரை அவனியாபுரத்தில் வரும் 14 ஆம் தேதியும், பாலமேட்டில் 15 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதேபோல் வரும் 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. முகூர்த்தக்கால் நடும் விழாவில் அமைச்சர்கள், ஆட்சியர் பங்கேற்கவில்லை.