தமிழ்நாடு

களை கட்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்

களை கட்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்

webteam

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விமர்சியாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள இந்தப் போட்டி மாலை 4 மணிவரை போட்டி நடைபெறவுள்ளது. போட்டியை தொடங்கும் முன்னர் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் வீரர்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றனர். 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,400 காளைகள், 848 மாடுபிடி வீரர்கள் ஜல்லிகட்டில் பங்கேற்கின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தலா 15 மருத்துவர்கள் அடங்கிய 12 மருத்துவக் குழுக்கள், 13 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. 4 தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன.

50,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. கேலரியின் இருபுறத்திலும் 8 அடி உயர இரண்டடுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. வீரர்கள், பார்வையாளர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த வீரருக்கும், சிறந்த காளைக்கும் புதிய கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.