மதுரை விமானநிலையம் கோப்புப்படம்
தமிழ்நாடு

மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை: முதல் கட்டமாக சென்னை டூ மதுரை விமானம்

மதுரை விமான நிலையத்தில் 24 மணி விமான சேவை நாளை முதல் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக நாளை இரவு 10:45 மணிக்கு மதுரை முதல் சென்னை வரையான விமான சேவை தொடர உள்ளது.

PT WEB

செய்தியாளர் சுபாஷ்

மதுரை விமான நிலையத்தில் 24 மணி விமான சேவை நாளை முதல் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக நாளை இரவு 10:45 மணிக்கு மதுரை முதல் சென்னை வரையான விமான சேவை தொடர உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி இந்திய விமான நிலையமானது ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் மதுரை விமான நிலையமானது 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவித்திருந்தது. அதன் முதல் கட்டமாக நாளை டிசம்பர் 20ஆம் தேதி மதுரையில் இருந்து இரவு 10:45 மணிக்கு கடைசி இண்டிகோ விமானம் சென்னை புறப்படும் என அறிவிப்பு வந்துள்ளது.

இண்டிகோ

ஏற்கனவே சென்னையில் இருந்து 8:45 மணிக்கு வந்து மீண்டும் மதுரையிலிருந்து 9 மணிக்கு கடைசி விமானம் சென்று வந்தது. தற்போது 24 மணி நேர சேவை அறிவித்த பிறகு, அதன் முதல் விமானம் சென்னையிலிருந்து 9:25 மணிக்கு புறப்பட்டு இரவு 10:20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னர் மீண்டும் பயணிகளுடன் 10:45க்கு மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 12:05 மணிக்கு சென்னை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவையின் முதல் கட்டமாக இது பார்க்கப்படுகிறது.