தமிழ்நாடு

2022க்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

2022க்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

webteam

மதுரையில் 2022ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில், 2022ஆம் ஆண்டுக்குள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜப்பான் அரசு அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்மூலம் எளிய வட்டியில் கடன் பெறப்பட்டு மருத்துவமனை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்பக்கட்ட வேலைகளுக்காக தற்போது ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் அடிப்படை கட்டப்பணிகள் நடைபெறும். இதைத்தொடர்ந்து ஜப்பானில் இருந்து கடன் பெறப்பட்ட பின்னர் பணிகள் மும்முரம் எடுக்கும் எனப்படுகிறது.