திருப்பரங்குன்றம் அருகே பரம்புப்பட்டி பகுதியில் விவசாயி மீது மின்னல் தாக்கியதில் அருகிலிருந்த பசு மாட்டுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை பரம்புப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாலு. மழைபெய்த காரணத்தால் இவர் தனது வீட்டின் அருகிலுள்ள வயலில் மேய்ச்சலுக்காக கட்டியிருந்த பசு மாட்டை வீட்டிற்கு அழைத்து வரச்சென்றிருக்கிறார். அப்போது மின்னல் தாக்கியதில் விவசாயி பாலு மற்றும் அவரது பசுமாடு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விவசாயி பாலுவிற்கு திருமணமாகி ஆறு மாதமே ஆன நிலையில், அவரது மனைவி அழகுப்பொண்ணு 3 மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மின்னல் தாக்கி பாலு உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.