தமிழ்நாடு

மதுரை: 500 புத்தகங்களை படித்ததோடு 74 புத்தகங்களுக்கு ரிவீவ் கொடுத்துள்ள 9 வயது சிறுமி

kaleelrahman

செல்போனில் பொழுதை கழிக்கும் சிறுவர்கள் மத்தியில் மதுரையைச் சேர்ந்த 9 வயது பள்ளி மாணவி 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்து முடித்ததோடு 74 புத்தங்கங்களுக்கு ரிவீவ் கொடுத்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த வெங்கட் - மோனிகா தம்பதியின் மூத்த மகள் நெரியா மோனிகா. 9 வயதான இவர் 4ம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிப்பதை வழக்கமாக் கொண்டுள்ள இவர், தனது 9 வயதில் 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்து முடித்துள்ளதுடன் 74 புத்தங்களுக்கு ரிவீவ் கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஆன்லைன் வகுப்பில் படிக்கும் பெரும்பாலான சிறுவர்கள் செல்போன் மூலம் கேம் விளையாடுவதில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், தனது அறிவு, திறமையை மேம்படுத்தும் வகையில் புத்தகம் படிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் இந்த சிறுமி. இவர், படித்த புத்தகங்களை ரிவீவ் செய்வதோடு, புத்தகத்தில் உள்ள பாசிட்டிவ் தகவல்கள், அதில் புடித்த விஷயங்கள், புத்தகத்தின் சாராம்சம் போன்றவற்றை ஜார் ஆப் ரிவீவ் (jar of review) என்ற இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதன் மூலம் தமக்கு கற்பனை திறன் அதிகரிப்பதாக கூறும் சிறுமி நெரியா மோனிகா, தனக்கு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் புத்தகம் படித்து வருவதாகவும் இதனால் மிகுந்த மன நிறைவும் மன அமைதியும் கிடைப்பதாகவும் இன்னும் சில நாட்களில் புத்தகம் எழுத உள்ளதாகவும் தெரிவித்த அவர், பெண்கள் முன்னேற்றம், நம்பிக்கை அளிக்கும் தகவல்களை எழுத உள்ளதாகவும் கூறினார்.