16 ஆடுகள் பலி – கதறியழுத மூதாட்டி pt desk
தமிழ்நாடு

மதுரை | தீப்பிடித்து எரிந்த குடிசை வீட்டில் கட்டியிருந்த 16 ஆடுகள் பலி – கதறியழுத மூதாட்டி

மதுரை மாநகர் கொடிக்குளம் கண்மாய் குடிசையில் தீ விபத்து - 16 ஆடுகள் தீயில் கருகி பலி - ஆடுகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவிப்பதால் மூதாட்டி கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை மாநகர் கோ.புதூர் எஸ்.கொடிக்குளம் கண்மாய்க்கரை பகுதியில் மூக்கன் என்பவரது மனைவி நாச்சம்மாள் குடிசை ஒன்றை உருவாக்கி அதில் தங்கியுள்ள அவர், 16 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு திடிரென உடல்நலம் குன்றிய மூதாட்டி அருகில் உள்ள வீட்டில் உறங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் வசித்துவந்த குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் 16 ஆடுகளும் முழுவதுமாக உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த மூதாட்டி கதறி அழுதுள்ளளார். துகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோ.புதூர் காவல் நிலைய போலீசார், விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வீட்டிற்குள் இருந்த மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்து குடிசை தீப்பற்றி எரிந்து ஆடுகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

கணவனை இழந்து தனியாக வசித்து வரும் மூதாட்டி நாச்சம்மாள், ஆடுகளை வளர்த்து அதன் மூலமாக கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்வாதாரத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் 16 ஆடுகள் தீக்கிரையானதைப் பார்த்து மூதாட்டி கதறியழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.