தமிழ்நாடு

மதுரை: மழைநீரில் மிதந்து சென்ற சின்டெக்ஸ் டேங்குகள்; வைரல் வீடியோ

மதுரை: மழைநீரில் மிதந்து சென்ற சின்டெக்ஸ் டேங்குகள்; வைரல் வீடியோ

kaleelrahman

மதுரையில் கடந்த 2 மணி நேரங்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

மதுரை மாநகரில் மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்குமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகள் அமைக்கும் பணி மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. அதற்காக சாலைகளிலும் சாலையோரங்களிலும் பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது. இதனை அறியாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மழைநீர் தேங்கியுள்ள பள்ளங்களில் விழுந்து காயப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து மேலமாசி வீதியில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் டேங்குகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதை அவ்வழியே சென்ற ஒருவர் எடுத்து பகிர்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.