மதுரையில், கோயில் வளாகத்திற்குள்ளேயே 'அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு' நடைபெற்றது.கொரோனா பரவலின் இண்டாவது அலை காரணமாக மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு ஆலய வளாகத்திற்குள் வாகனகாட்சியாக நடைபெறும் என்று சமீபத்தில் கோயில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி திருவிழா ஆலய வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. வைகை ஆறு போன்றே செட் அமைக்கப்பட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.