தமிழ்நாடு

பாவத்தைக் கழுவ பன்னீர்செல்வத்திடம் சரணடைந்தேன்: அவைத்தலைவர் மதுசூதனன்

பாவத்தைக் கழுவ பன்னீர்செல்வத்திடம் சரணடைந்தேன்: அவைத்தலைவர் மதுசூதனன்

webteam

அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து அவரது ஆதரவைத் தெரிவித்தார்.

அதிமுகவின் தலைமைக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவருக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு நேரில் வந்து அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், யாருடைய நிர்பந்தமும் இன்றி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். அதிமுகவினர் சசிகலாவை நிராகரிக்க வேண்டும் என்றும் மதுசூதனன் கேட்டுக் கொண்டார். சசிகலாவிடம் கைகட்டி நிற்பதற்காக ஆர்.கே.நகர் மக்கள் தன்னை திட்டித் தீர்ப்பதாகக் குறிப்பிட்ட மதுசூதனன், அந்த பாவத்தைக் கழுவவே பன்னீர்செல்வத்திடம் சரணாகதி அடைந்ததாகவும் பேசினார்.