தமிழ்நாடு

சென்னை பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு: துணைவேந்தர்

சென்னை பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு: துணைவேந்தர்

rajakannan

கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக் கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நவம்பர் 2-ம் தேதி (வியாழக்கிழமை) சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் சென்னை நகரமே ஸ்தம்பித்தது. இதனையடுத்து நேற்று பகல் முழுவதும் பரவலாக மழை பெய்யவில்லை. இருப்பினும் இரவில் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இதனையடுத்து, சென்னையில் கிண்டி, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார். கனமழையால் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.