அரியர் தேர்வு ரத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களையும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே ராம்குமார் தொடர்ந்த வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து பட்டியலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அரியர் தேர்ச்சி குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் மத்திய அரசு, ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி. ஆகியவையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை செப்டம்பர் 30க்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.