தமிழ்நாடு

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம்

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம்

rajakannan

சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியின் முதல்வர் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகக் கூறி கல்லூரி பேராசிரியர்கள் 7 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்லூரி முதல்வர் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டதாக பச்சையப்பன் அறக்கட்டளை தேர்வுக்குழு தரப்பில் வாதிடப்பட்டது. 

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்லூரி முதல்வர் சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி முதல்வரை மீண்டும் தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ளும்படி நீதிபதி அறிவுறுத்தினார். அதேவேளையில் மனுதாரர்கள் கூறியுள்ள முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.