சென்னை உட்பட தமிழகத்தில் எத்தனை ரவுடி கும்பல் தீவிரமாக உள்ளது என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தன்னை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து வேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, ரவுடி கும்பலையும், கூலிப்படையினரையும் ஒழித்து விட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தமிழக காவல்துறைக்கு நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை முன் வைத்தனர். இதனையடுத்து, நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தமிழக டிஜிபி, மத்திய உள்துறை செயலாளர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தமிழக டிஜிபி-யையும், மத்திய உள்துறை செயலாளரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்தனர்.
நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:-