தமிழ்நாடு

வெற்றி செல்லாது என புகார்: தேர்தல் வழக்கில் ஓபிஎஸ்க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Sinekadhara

போடி தொகுதியில் வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க ஓபிஎஸ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

போடி தொகுதியில் அதிமுக சார்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய வெற்றி செல்லாது என போடி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது ஓபிஎஸ்க்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதில், வேட்பு மனுவில் கடன் மதிப்பை ஓபிஎஸ் குறைத்து காட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள், புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். எனவே ஓபிஎஸ் வெற்றிபெற்றது செல்லாது எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்குக் குறித்து வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.