தமிழ்நாடு

டோல் கேட்டில் 15 நிமிடம் நீதிபதிகள் காத்திருப்பதா ? - சென்னை உயர்நீதிமன்றம்

டோல் கேட்டில் 15 நிமிடம் நீதிபதிகள் காத்திருப்பதா ? - சென்னை உயர்நீதிமன்றம்

webteam

சுங்கச்சாவடிகளில் தனிவழியில் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் நிலுவை சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், முரளிதரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள் வாகனங்கள் செல்லும்போது உரிய வழி இல்லை என்று கூறினர். வாகனங்களில் நீதிபதிகளுக்கான சின்னம் இருந்தாலும், ஓட்டுநர் அடையாள அட்டை காண்பித்தாலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தரக்குறைவாக நடப்பதாக கண்டனம் தெரிவித்தனர். 

அவ்வாறு காத்திருக்கும் 5 முதல் 10 நிமிடங்கள் நீதிபதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். சுங்கச்சாவடிகளில் அவசர வாகனங்கள் செல்லும் வழிகளில் நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எச்சரித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.