சி.வி.சண்முகம் - சென்னை உயர்நீதிமன்றம்
சி.வி.சண்முகம் - சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
தமிழ்நாடு

சி.வி.சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகள் ரத்து; மேலும் 2 வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

webteam

* 12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம்,

* வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது,

* கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து பேசியது,

- ஆகியவற்றின் மூலம் அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது.

CV.Shanmugam

இவற்றை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு சமீஅப்த்தில் ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி “முதல்வரை தாக்கியோ, நேரடியாகவோ சி.வி.சண்முகம் பேசவில்லை. தமிழக அரசை மட்டுமே விமர்சித்ததார். எங்கள் தரப்பினரின் போராட்டத்திற்கு பிறகு 12 மணி நேர வேலை என்ற அரசு அறிவிப்பை திரும்பப்பெறும்போது, எங்கள் கருத்து எப்படி அவதூறாக கருத முடியும்?” என வாதிட்டார்.

மேலும் அவதூறு வழக்கு தொடர்வதற்கான அரசாணையை பிறப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் மனதை செலுத்தி விஷயத்தை ஆராயாமல், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்வதாக குற்றம்சாட்டினார்.

அப்போது நீதிபதி, “அரசை விமர்சித்த அதேவேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத்தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது” என சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “அரசையும் முதல்வரையும் விமர்சிக்கும் வகையில் சி.வி.சண்முகம் பேசிவிட்டு, நேரடி தாக்குதல் நடத்திவிட்டு, தற்போது அவதூறு கருத்து இல்லை என கூறுவதை எப்படி ஏற்க முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

Court order

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மத்திய அரசை கண்டு தமிழக அரசு பயப்படுவதாகவும், கஞ்சா முதலமைச்சர் என விமர்சித்ததற்காக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தொழிலாளர் சட்டம் குறித்த வழக்கு, 420 அரசு என பேசியதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகிய இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்து, அதுதொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.