தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் 40,000 ஏக்கர் கோயில் நிலங்கள் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் 40,000 ஏக்கர் கோயில் நிலங்கள் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

Sinekadhara

தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான 40000 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்திருக்கிறது.

திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில் தூத்துக்குடி, உட்பட சில திருக்கோயில்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பாதுகாக்க பல்வேறு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, முறையான நடவடிக்கைகளை முழுமையாக எடுக்கவேண்டும் எனவும், இதற்கு முன்பாக இதுகுறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் முழுமையாக நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்றும், அதேபோல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வரும் அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மெதுவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான 40000 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. எனவே கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு சொத்துவிவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவேண்டும். கோயில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற 2 குழுக்களை நியமிக்க வேண்டும்” என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.