குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கையை சமர்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரி சுத்தமாக வரண்டு விட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது. 23 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தர அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.