திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்த சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 19 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்ட மீட்பு நடைவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மீட்பு பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் இணந்துள்ளனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் குழுவில் தொடர்ந்து பணியாற்றி வரும் சிறுவன் மாதேஷ், மீட்புப் பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார் அதில் " ஏற்கெனவே செய்து வைத்திருந்த கருவிகள் இப்போது எங்களிடம் இல்லை. போர்வெல் அமைப்பதற்காக அந்த கருவிகளைப் பயன்படுத்தி விட்டோம். அந்த கருவிகள் இப்போது இருந்திருந்தால் குழந்தையை தூக்கி இருக்கலாம். ரப்பர் போன்ற கருவி குழந்தையின் கையை அழுத்தமாகப் பிடிக்கும், பின்னர் அசைத்தவாறே குழந்தையை மெல்ல மேலே கொண்டு வரலாம் என நினைத்தோம். ஆனால் வேறு காரில் வந்துவிட்டதால் எங்களிடம் போதிய கருவிகள் இல்லை.
கூட்டமாக நின்று பேசினால் பணியில் கவனம் செலுத்த முடியாது. நள்ளிரவில் குழந்தையின் கை தெரிந்தது; அப்பா, அம்மா என அழைத்தான். பொக்லைன் வைத்து தோண்டினார்கள்; வேண்டாம் எனக் கூறினோம். அப்போது அசைவு ஏற்பட்டதால் குழந்தை கீழே இறங்கி விட்டது. கேமராவை குழிக்குள் செலுத்தி பார்த்தபோது குழந்தை முனகியது. குழந்தை மூச்சுவிடும் சத்தம் நன்றாகக் கேட்டது" என தெரிவித்துள்ளார்.