தமிழ்நாடு

மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் ஹாயாக உலாவரும் முதலை – அச்சத்தில் பொதுமக்கள்

webteam

மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் உலாவரும் முதலையால் ஆற்றுப் பாலத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பழைய மற்றும் புதிய ராஜா வாய்க்கால் பாசன பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்காகவும், பாசனத்திற்காகவும் அமராவதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. இதில், சில முதலைகள் அணையில் இருந்து தப்பித்து அமராவதி ஆற்றுப் பகுதிகளில உலா வருகிறது.

இதனால் கல்லாபுரம், மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர, கணியூர் மற்றும் கடத்தூர் ஆகிய ஆற்றுப் பகுதிகளில், அவ்வப்போது பாறைகளின் மேல் படுத்துக் கொள்ளும் முதலையை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சில சமயம் விவசாய நிலங்களில் முதலை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் முதலையை பிடிக்க வேண்டுமென விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஆற்றில் உலா வரும் முதலையை பார்பதற்காக கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமராவதி ஆற்றுப் பாலத்தில் ஏராளமான வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், குவிந்ததால் ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..