தமிழ்நாடு

“மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்”- மா.சுப்ரமணியன்

“மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்”- மா.சுப்ரமணியன்

EllusamyKarthik

மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். போலி மருந்து விற்பவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். 

மேலும் "வீட்டில் தனிமையில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். மருத்துவர்கள் ஆலோசனையின்றி ஆக்சிஜன் எடுத்துக்கொள்வது தவறு. அதை முயற்சிக்க வேண்டாம்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.