நீட் தேர்வு பற்றிய ஆய்வுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் பாதிப்புகள் குறித்தான விவகாரங்களுக்கு சட்ட ரீதியாக துணை நிற்போம் என பாஜகவினர் சட்டப்பேரவையில் தெரிவித்துவிட்டு, தற்போது ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து மனு தாக்கல் செய்திருப்பதாக மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவின் இரட்டை நடவடிக்கை உலகுக்கு தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.