21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவுசெய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘’பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களையே நோய் தாக்குகிறது. என்னையும் கொரோனா நோய் விட்டுவைக்கவில்லை. ஆனால் தீவிரமாக இல்லாமல் லேசான அறிகுறிகளுடன் கொரோனா சென்றுவிட்டது. அதன்பிறகு தினமும் 10 கிலோமீட்டர் ஓடிக்கொண்டிருக்கிறேன். எங்கே இருந்தாலும் ஓட்டப்பயிற்சியை செய்யும் பழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த 2 மாதக்காலமாக அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் பணிச்சுமை காரணமாக எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளமால் இருந்து வந்தேன். கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
மாரத்தான் போட்டிகளுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து வந்தது. வரும் காலங்களில் மாரத்தான் போட்டிகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும்.’’ என்று கூறினார்.