தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், ‘’தமிழகத்தில் 36வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்துவருகிறது. கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவிற்கே தற்போதும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தினமும் 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்களுடன் காணொலியில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.