தமிழ்நாடு

தமிழ் இருக்கைக்கான நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழ் இருக்கைக்கான நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

webteam

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு தேவையான நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இருதினங்களுக்கு முன்பு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து சில திரைத்துறையினரும் நிதியை வழங்கியுள்ளனர். இந்நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியை அறிவித்துள்ளதால், மேலும் தேவைப்படும் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என ட்விட்டரில் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.