அமர்நாத் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தயவு தாட்சண்யமின்றி தண்டிக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அமர்நாத் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என தெரிவித்துள்ளார். அப்பாவி யாத்ரீகர்களை தாக்கியவர்களை தயவு தாட்சண்யம் இன்றி தண்டிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.